Thursday, December 19, 2019

எனது பங்களிப்புடன் உருவான இலங்கையில் சித்தமருத்துவம்  தொடர்பான "அகத்தியன் அவிழ்தம் - ஆவணப்படம்.அகத்தியன் அவிழ்தம்" ஆவணப்படம். நன்றி - சுதேச மருத்துவத் திணைக்களம், வடமாகாணம்.
என்னைப்பற்றியும் எனது சிறுகதை பற்றியும் மூத்த எழுத்தாளர் திரு. நந்தினி சேவியர் அவர்கள் (திருகோணமலை) தனது முகநூலில் ....நன்றி.
பிடித்த சிறுகதை - 562.
*************************
நமது படைப்பாளிகளில் ஆசிரியர்கள், எழுது
வினைஞர்கள், கிராம சேவகர்கள், மற்றும்
நிர்வாக சேவை அதிகாரிகள் என பலரை
அறிந்து வைத்திருக்கிறோம்.
இவர்களோடு வேறும் தொழில் சார் எழுத்தாளர்களும் நம்மத்தியில்இருந்தார்கள்,
இருக்கிறார்கள்.
நான் இப்போது எழுதப்போவது ஒரு சுதேச மருத்துவர் பற்றி.
வன்னியூர்க்கவிராயர், நீள்கரை நம்பி,
இராஜதர்மராசா, உடுவில் அரவிந்தன் வரிசையில் வரும் சுதேச வைத்தியர்
இவர்.
பட்டியலில் சிலரை குறிப்பிடவில்லை.
இன்னும் சிலர் இருக்கிறார்கள் அவர்களை
அறிந்தவர்கள் பின்னூட்டமிடவும்.
" மானிப்பாய் சுதன் "***********************
இயற்பெயர் : தியாகராசா சுதர்மன்.பொன்னாலை யில் 30/ 5/ 78 ல் பிறந்தவர்.
சுளிபுரம் விக்ரோறியக்கல்லூரி பழைய
மாணவர்.
யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவப் பட்டதாரி.
உளவியல் டிளோமா பெற்றவர்.
பேராதனை பல்கலைக்கழகத்தில்
உணவும் போசணையும் துறையில் பட்டமேற்படிப்பை மேற்கொண்டவர்
2004 ல் திருகோணமலையில் நியமனம்பெற்றவர்.
தற்போது யாழ் மாநகரசபையில் சித்த மருத்துவராக கடமையாற்றுகிறார்.
வாழ்விடம் மானிப்பாய்.
2013 ன் பின் எழுத்துத் துறைக்கு வந்தவர்.
நிறையக்கதைகளும் மருத்துவக்கட்டுரைகளும் எழுதிவருகிறார்.
வலம்புரி, உதயன், தினக்குரலில் எழுதுகிறார் ஜீவநதியிலும் இவரது கதை
பிரசுரமாகியுள்ளது.
சிறுகதைகள் இணையத்தில் இவரது 13
கதைகள் பதிவேற்றம் பெற்றுள்ளன.
இன்னும் சிறுகதைத் தொகுதி ஒன்றும்
வெளியிட வில்லை
இவர் கதைகளில் எனக்குப் பிடித்த
கதை இது.
" துலா(ளை)க் கிணறுகள் "
******************************
2017..மாசி ஜீவநதி இதழில்
பிரசுரமானகதை.
சிறுகதைகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளகதைகளில்
ஒன்று.
பொன்னாலைத் தம்பர் மஹத்மியம்.
********
யாழ் குடா நாட்டையும்..
என்று ஆரம்பித்து
கிணற்றுக்குள்ளேயே அடங்கிப்போனது.
*********
என்று முடியும் கதையை மேற்படி இதழிலும்,
இணையத்திலும் வாசிக்க முடியும்.
பலநாட் தேடலின் பின் ஒரு நண்பரின் உதவியால் இவர் பற்றிய தகவலை அறிந்தேன்.
அவருக்கு எனது நன்றி.!

அன்பே சிவம் குறுங்கதைகள் - 1. இறைவன்

  “ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் த...