என்ன குறையென்று
நான் சொல்ல?
தனியறை கூடவே
தொலைக்காட்சி
தளிர்களுடன்
அளவலாவ அலைபேசி
வேளை தவறாமல்
உண்டிட
வேளை உணவது குளிர் பெட்டியில்
மனச்சுமை தணிய
மனையதில் பூச்சாடி
நான்கு!
இருந்தும் நீரிழிவும்
இன்றுவரை குறையவில்லை?
*************************************
எனக்கென்ன குறை?என் மகள் வெளிநாட்டில்
மகன் வீட்டில்
சுகவாசம்
மருமகளோ வாய்பேசா!
தொல்லையில்லா
பேரன்கள்
தொலைபேசியில்
கரைந்திருக்க
கூடவே சுத்தியபடி
கூரையதில் மின்விசிறி
இருந்தும் நீரிழிவும்
குறையவில்லை
இரத்த அழுத்தமதும்
கூடிவிட
எனக்கென்ன குறை?
என்குருதி கொழுப்பதுவும்
கூடிவிட
மருத்துவரும்
பழகிவிட
மற்றெதுவும் கேட்பதில்லை - ஆனால்
குறைவொன்றும்
நிகழவில்லை
மருந்துகளே
உணவாக
மனமது சலித்துக்
கொள்ள
தொலைபேசியும்
தொல்லையாக
தொலைக்காட்சியும்
சலித்துக்கொள்ள
இதுதான் வெறுமையோ?
இதுதான் இருப்பின்மையோ?
******************************************
எனக்கென்ன குறை?
என் கணவன் தவிர
கணவனது நினைவுகள்
நிழலாட
கண்கள் குளமாக
வாய் விட்டு
அழுதிட
வாசலிலும் யாருமில்லை
எனக்கென்று
எவருமில்லை இன்று
என் கதை சொல்வதற்கு
வாஞ்சையுடன்
காத்திருக்கிறேன்
வாய்விட்டு
கதைப்பதற்கு
என் குரலதைக்
கேட்டுவிட்டால்
என் குழிகைகளும்
குறைந்துவிடும்
நேரமில்லை என்று
நேர்படவே கூறிவிட
குறையொன்றுமில்லை
இல்லை
குறைபடவும்
யாருமில்லை.