Sunday, September 26, 2021

ஓம் சாந்தி … ஓம் …

பதஞ்சலியோ திருமூலரோ கார்த்திக்கின் முன்னால் இன்றுவந்தால்! கார்த்திக்கின் கேள்விகள் உங்களுக்கெல்லாம்மனச்சாட்சி இருக்கா? எவ்வளவு அருமையானயோகாசனங்களைத் தந்த நீங்கள்? இந்த சாந்தியாசனத்தைஏன் தந்தீர்கள்? என்று கேள்விகளால்துளைத்தெடுத்திருப்பான்.

என்ன செய்வது ஒரு காலத்தில் மனைவி ஜெசி சாந்தியாசனம்செய்வதையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன்தான் இந்த  கார்த்திக். ஆனால்….


கார்த்திக்குக்கும் ஜெசிக்கும் திருமணம் முடிந்த பின் இருவரும்வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று திட்டம் தீட்டவேபல இரவுகளைத் தொலைத்திருந்தார்கள். சிவசங்கரி, லக்சுமிபோன்றோரின் கதைகள் போல், பல திரைப்படங்களின்கதைகள் போல் தங்கள் வாழ்க்கையும் ஒரு நதிபோல ஓடவேண்டும், எப்பொழுதும் குடும்பத்தில் சந்தோசம் சலசலத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று கற்பனையில் மிதந்தார்கள்.


கார்த்திக்  தனக்குத் திருமணமானபின் மனைவியுடன்விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை, தானும்மனைவியும் உருகி உருகி அன்பு வழிய பார்க்கவேண்டும் என்றநினைவில் மனைவிக்கான கூறைப்புடவை எடுக்க முன்னரேஅத்திரைப்பட சீடியை வேண்டிப் பத்திரமாக வைத்திருந்தான். ஆனால் விதி? படங்கள் அதிகம் பார்த்திராத ஜெசி படத்தின்எழுத்தோட்டம் முடிய முன்னரே நித்திரையாகிவிடுவாள். அன்புஉருகி வழிய  விண்ணைத்தாண்டிப் பறக்கலாம் என்றிருந்தவன்ஜெசியின் வாயருகில் வீணீர் வடிவதை பார்த்துக்கொண்டு, பதினேழாவது முறையாக தனிமையில் ஜெசியாகிய திரிசாவைஇன்று ரசித்துக்கொண்டிருக்கிறான்..




திருமணமான புதிதில், இஞ்சேப்பா நாங்க இரண்டுபேரும்வேலைக்கு போகிறவர்கள். அதனால் வீட்டுவேலைகளைஇரண்டுபேரும் சமமாக பிரித்து செய்ய வேண்டும். மற்றவர்களைமாதிரி பெண்களின் கஸ்டங்களை புரிந்து கொள்ளாத ஆள்நான் இல்லை. ஆணாதிக்க குணமுமில்லை. மற்றவர்களுக்கு முன்னால் உன்னை வெருட்டி உருட்டி படம் காட்டுகிறஆளுமில்லை. இன்றைக்கு என்னென்ன வேலை, யார் யார்செய்வதென்று பிரித்துக் கொள்ளுவோம்.


தனக்கு கணவனாய் நீ கிடைக்க நான் என்ன தவம்செய்தேனோ? என்பதுபோல் ஜெசி கார்த்திக்கைப் பார்க்ககார்த்திக் சொக்கித்தான் போனான். கார்த்திக்கின் கண்களில்மயக்கம் தெளிவாகத் தெரிய, இதுதான் சரியான நேரம்வேலைகளைப்பிரிக்க என வேலைகளைப் பிரிக்கத்தொடங்கினாள் ஜெசி.


காலையில் தேநீர் ஊற்றுவது நான். ஆனால் நான் காலையில்யோகாசனம் செய்வதால் நீங்கள் சுடுதண்ணியை வையுங்கோ, யோகா செய்து முடிய நான் தேநீர் ஊற்றுகிறேன் சரியாஎன்றால் கெஞ்சலாக.

்

படுக்கையிலேயே தேநீர் கோப்பையுடன் மனைவிவருவதுதானே வழமை. சிவசங்கரியின் புத்தகங்களில்அப்படித்தானே வரும். பரவாயில்லை யோகா செய்யத்தானே! யோகா செய்தாத்தானே மனைவி திரிசா மாதிரி ….ஸ்லிம்மாஇருப்பாள். 

சரி அப்படியே ஆகட்டும் என்றான் மனைவியின்கெஞ்சலின் மயக்கத்தில்.


நீங்க காலையில் வெளியில கூட்டிதுப்பரவு, நான் வீட்டுக்குள்கூட்டித்துப்பரவு செய்கிறேன்.


ம்..ம்..ம்…, அடியே வெளியில் நாலு பரப்பு காணியும்,இரண்டறை வீடும் சரியோ?


என்னப்பா? நீங்க ஆம்பிளைப்பிள்ளை, எனக்காக இதைக்கூடசெய்யமாட்டியளோ?


ஆம்பிளைப்பிள்ளை! அந்த ஒரு வார்த்தை… சரி சரி நான்செய்கிறேன் என்று சொல்ல வைத்தது கார்த்திக்கை.


நீங்கதானே வீட்டுத்தலைவன் அப்ப நீங்கதான் கடைகளுக்குப்போய்வரவேண்டும்.


வீட்டுத்தலைவன்! சற்றே நெஞ்சை நிமிர்த்தியவாறே நல்லயோசனை என்றான்.


இப்படிப் பல வேலைகளும் பிரிபட்டபோது கார்த்திக்கின்தராசுப்பக்கம் சற்று கீழ் நிற்பதாகவே பட்டது. ஆனாலும் கெஞ்சலிலும்  கொஞ்சலிலும் சமனாகத் தெரிந்தது கார்த்திக்கிற்கு.


ஒரு நாள் வெளி வேலைகள் எல்லாம் முடிய தேநீருக்காகவீட்டுக்குள் வந்தவனுக்கு ஏதோ எரியும் வாசனை வரஓடிச்சென்று குசினியைப் பார்த்தான். எரிவாயு அடுப்பில்கேத்தல், தண்ணீரெல்லாம் வற்றி அடி சிவந்துகொண்டிருந்தது.


சற்றுக் கோபத்துடன் அடுப்பை அணைத்தவன், ஜெசி யோகாசெய்யும் அறைக்குள் போனான். அங்கோ அலைபேசியில்ஓம்சாந்தி …..ஓம்சாந்தி …. என குரல் போய்க்கொண்டிருக்க, ஜெசியோ மல்லாக்கா படுத்து கைகளையும், கால்களையும்பக்கவாட்டில்  எறிந்துவிட்டு கண்ணை முடி ஆழ்ந்தநித்திரையில் இருந்தாள்.


கார்த்திக்குக்கோ கேத்தலின் அடி சிவந்ததுபோல் அவனுக்கும்சிவக்க, கேத்தல் அடுப்பில எரிஞ்சுபோகுது நீ என்ன? யோகாசெய்கிறேன் என்று மாரித்தவக்களை மாதிரி கிடந்து நித்திரைகொண்டிருக்கிறாய் என கத்தினான்.


ஜெசியோ நிதானமாக, மெதுவாக கைகளை எடுத்து இரண்டுகைகளையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து தேய்த்து முகத்தில்மேலிருந்து கீழாக அழுத்தி துடைத்துக்கொண்டு கண்களைவிழித்து முறைத்துப் பார்த்தாள்.


என்னப்பா? கத்துகிறியல்? சாந்தியாசனத்தில் இருக்கும்போதுஇப்படி குழப்பினால்? இன்றைக்கு நல்லாத்தான்இருக்கப்போகுது. என்றவளை இடைமறித்து கேத்தல்எரிஞ்சுபோறது தெரியாம என்ன செய்துகொண்டிருக்கின்றாய்எனக் கேட்டான் கார்த்திக்.


உங்களுக்குத் தெரியுந்தானே நான் யோகா செய்கிறது. கேத்தலில் தண்ணியை வைச்சா இடையில பார்க்க வேண்டும். அதைவிட்டிட்டு….

இருவரும் கடுப்பாகி காலை உணவும் இல்லாது, வேலைக்குச்சென்றனர். 


மாலை வேலையால் வந்ததில் இருந்து ஒரேதலைவலி என படுத்துவிட்டால் ஜெசி. காலையில் சாந்தியாசனத்தை கார்த்திக் இடையில் குழப்பியதாலேயேதலைவலி வந்ததாக சொல்லி சொல்லி தலையைப் பிடித்துக்கொண்டிருந்தாள். கார்த்திக்கிற்கோ இன்று முழுவதும் கடைச்சாப்பாடாகவே முடிந்தது. 


அடுத்தநாள் கார்த்திக் அதிகாலையே எழும்ப வேண்டியதாக இருந்தது. சமைக்கவல்ல. கடைச்சாப்பாடுகளின் மகத்துவம் வயிற்றோட்டம் வெள்ளவோட்டமாகப் போக, வேலைக்குவிடுமுறை போடுமளவுக்கு இருந்தது.  


இப்படியான நாட்கள் தொடர, கார்த்திக்கே தேநீரை ஊற்றிக்கொள்ள பழகிக்கொண்டான். இதனால் தனது தராசுப் பக்கம்கொஞ்சம் பாரமாக தெரியத்தொடங்கும் போதேல்லாம்,ஜெசியைப் பார்ப்பவர்கள் எல்லாம், எப்படியப்பா இப்படிஅழகா! ஸ்லிம்மா!!! இருக்கிறீங்கள் என்று கேட்க, மனிசன்உன்னில நல்ல கவனந்தான் போல எனக் கேட்கும்போது தராசு மீண்டும்  சமநிலைக்கு வந்துவிடும்.


அதில் கொடுமையான சுவாரசியம் என்னவென்றால், ஜெசி யோகா செய்யும்போது குண்டலினி விழித்துக்கொள்ள ஜெசி யோகா விரிப்பில் இருந்து அரையடிக்கு உயர்ந்து அந்தரத்தில் மிதப்பதாகவும் , அதனை கார்த்திக் கண்டதாகவும் வதந்தி வேறு உலாவத் தொடங்கியிருந்தது உறவினர் நண்பர்கள் மத்தியில். 


இந்த வதந்தி எப்படி வந்தது? நான் எப்போது இப்படிசொன்னேன்? விடை தேடினான் கார்த்திக். ஒருமுறைகட்டிலில் ஜெசி சாந்தியாசனத்தில் மல்லாக்கா பப்பரக்கா எனபடுத்திருந்ததை கார்த்திக் இன்று ஜெசி கட்டிலுக்கு மேலேஎல்லோ யோகா செய்தவா என்று பெருமையாகச்சொன்னதுதான் இப்படி மாறியிருக்கிறது என்பது விளங்கியது. அட எங்களது சுற்றம் இவ்வளவு அப்பிராணியாகஇருக்கிறார்களே என்று நினைத்துச் சிரித்துக் கொண்டான். 


இப்படி பல உசுப்பேத்தல்கள், கெஞ்சல்கள், கொஞ்சல்கள், வதந்திகள் என அலுத்துப்போய் காய்கறி வெட்டி வைத்தல், தேங்காய் திருகுதல், சோறு சமைத்தல் என கார்த்திக் ஒருபக்கத்தால் நளபாகத்தில் முன்னேறிக்கொண்டிருக்க, அதன்பக்குவத்தில் ஜெசியும் உப்பிப்பருத்து வந்துகொண்டிருந்தாள். அத்துடன் இப்பொழுதெல்லாம் ஓம்சாந்தியின் நேரம்அதிகரித்திருந்தது.


இன்று வழமைபோல் சமைத்து முடித்து, காலைச்சாப்பாட்டைகோப்பையில் போட்டுவைத்துவிட்டு குளிக்கச் சென்றான்கார்த்திக். குளித்துவிட்டு வந்து பார்த்தால், ஜெசியின் யோகாஅறை மூடியே இருந்தது. ஓம் சாந்தியும் போய்க்கொண்டிருந்தது இன்று தலைவலி வந்தாலும் பரவாயில்லை என நினைத்துக்கொண்டே, கதவைத்தட்டினான் திறக்கவில்லை. 


கார்த்திக் பதட்டமாகி கதவின் திறப்பு ஓடடைக்குள்ளால் சூம் பண்ணிப் பார்த்தான் ஒரே இருட்டாக இருந்தது. காரணம் உட்பக்கமாக கதவில் திறப்பு  இருந்தது. சன்னமான குரலில் "இஞ்சேப்பா இஞ்சேப்பா” என்ற சத்தம் கேட்டது உள்ளிருந்து. 


பதட்டம் அதிகமாக கதவை தள்ளியும் திறபடாமல் போக, ஜன்னல் பக்கம்போய் உள்ளே பார்த்தான். அங்கு ஜெசி தன்பருத்த உடம்புடன் எழும்ப ஏலாது எழும்ப முயற்சித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.


பலம் கொண்ட மட்டும் கதவினைத் தள்ளி கதவின் திறாங்குகள்தெறிக்க உள்ளே போனவன், ஜெசியை கைத்தாங்கலாகதூக்கி கதிரையில் இருத்தினான். நாரிக்குள் பிடித்துவிட்டது. அசையக்கூட முடியவில்லை என்றவளை ஒருவாறு கார்வரைகொண்டுவந்து மருத்துவரிடம் கூட்டிச் சென்றான்.


மருத்துவர் எல்லாவற்றையும் பரிசோதித்து விட்டு, மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு, அம்மாவுக்கு உடம்பு பாரம்கூடிவிட்டது என்றார். திருமணமானால் இப்படியும் அம்மாவாகலாமோ? என்ற கார்த்திக்கின் சிந்தனையைகலைத்த மருத்துவர், உடம்பைக் குறைக்க வேண்டும். இதற்குமருந்துகள் மட்டும் போதாது உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டும். யோகா செய்தால் இன்னும் நல்லது என்றவரை முறைத்தான் கார்த்திக்.


அது சரி … ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்… இனி அது நடக்காது. நடக்கவும் விடமாட்டேன் என்று முணுமுணுத்த கார்த்திக்கைமருத்துவர் ஒரு மாதிரியாகப்  பார்க்க, கைத்தாங்கலாக ஜெசியை அரவணைத்து  இழுக்கும்போதுதான் கார்த்திக்கிற்கு தெரிந்தது. தராசு முழுவதுமாய் மூச்சுமுட்ட தன் பக்கம் அழுத்துவதனை  உணரக்கூடியதாக இருந்தது.


ஜெசியும்  எதையும் முறையாக கற்று செய்ய வேண்டும்என்பதனையும், சோம்பேறித்தனம் ஆரோக்கியத்தின் எதிரி என்றும்  உணர்ந்து கொண்டாள்.

 

No comments:

Post a Comment

அன்பே சிவம் குறுங்கதைகள் - 1. இறைவன்

  “ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றவன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் த...